சம வேலைக்கு சம ஊதியம் வலியுறுத்தி ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் சங்கம் சார்பில் கடலூர் புவனகிரியில் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது



15.02.2020 அன்று கடலூர் அருகே புவனகிரியில் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது

பள்ளிக்கல்வித்துறை ஒருங்ணைந்த கல்வி திட்டத்தில் பணிபுரியும் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது இதில் தலைவர் வினோத்குமார் வரவேற்புரை ஆற்றினார் மற்றும் தமிழ்நாடு தமிழ்ச் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரகுநந்தன் வாழ்த்துரை வழங்கினார் இதில் 10 ஆண்டுகளுக்கு மேல் திட்டத்தின் தொகுப்பு ஊதியத்தில் பணி புரிவதால் இவர்களை காலமுறை ஊதியம் நிர்ணயித்து மற்றும் முக்கிய கோரிக்கையான 1517 பணியாளருக்கு  கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை  எனவே தற்போது இவருக்கு புதிய ஊதியம் நிர்ணயித்து சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் இதில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து கணக்காளர்கள் மற்றும் கணினி விவரப்பதிவாளர்,உள்ளிட்ட அனைத்து தொகுப்பூதிய பணியாளர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் செயலாளர் ராஜ்குமார் நன்றி உரையாற்றினார் இதில் தமிழ்நாடு ஆசிரியர் சங்க நிர்வாகிகள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்

- ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் சங்கம்

Comments

Popular posts from this blog

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டு (2020-21) பட்ஜெட்டில் மாத ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு கோரிக்கை

வடலூரில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கல்வி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம்

ஒருன்ங்கினைந்த கல்வி திட்டத்தில் முடங்கிய கோடிகள் கல்வித்துறை குறட்டை - நக்கீரன் வார இதழ்