Posts

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய கணக்காளர்களின் பணி நிரவல் ஆணையை ரத்து செய்ய கோரிக்கை

Image
  ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய கணக்காளர்களின் பணி நிரவல் ஆணையை ரத்து செய்ய கோரிக்கை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின்  கீழ் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் செயல்பட்டு வருகிறது. திட்டத்தில் 700 மேற்பட்ட கணக்காளர்கள் மிக குறைவான தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். 02.09.2024 அன்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அவர்கள் செயல்முறைகளின் கடிதம் ந. எண் 1637/அ 3/ஒபக/2024 நாள் 30.08.2024 இருந்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கணக்காளர்களுக்கு பணி நிரவல் ஆணை வெளியிடப்பட்டது பணி நிரவல் ஆணையில் தொகுப்பூதியத்தில் அனைத்து கணக்காளர்கள் பாதிக்கப்படுகிறோம், கணக்களர்கள் ஊதிய வேறுபாடு உடன் பணி புரிந்து வருகிறோம் , குறிப்பாக நிறைய மாவட்டங்களில் கணக்காளர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று இரண்டு மடங்கு பயண தூரம் சென்று பணிபுரியும் சூழல் உருவாகி உள்ளது என்பதை தெரிவித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நல சங்கம் சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு எண் 10125731 நாள் 04.09.2024 அன்று பணி நிரவல் ஆணை ரத்து செய்துவிட்டு விருப்ப பணிமாறுதல் கலந்தாய்வு நடத்திட...

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டு (2020-21) பட்ஜெட்டில் மாத ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு கோரிக்கை

Image
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டு (2020-21) பட்ஜெட்டில் மாத  ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு  கோரிக்கை தமிழ்நாடு ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில்  பணிபுரியும் தணிக்கை மற்றும் கணக்கு மேலாளர், கணக்காளர்கள், மாவட்ட மற்றும் வட்டார கணினி விவரப் பதிவாளர்கள், தகவல் நிர்வாக மேலாண்மையாளர்கள், கணிணி வகைப்படுத்துனர், மற்றும் கட்டிட பொறியாளர், உள்ளிட்ட சமக்ரா ஷிக்ஷா திட்ட தொகுப்பூதியத்தில் ஏறக்குறைய 1500 மேற்ப்பட்ட பணியாளர்கள் பல ஆண்டுகளாக மிகக் குறைந்த சம்பளத்துடன் பணியாற்றி வருகின்றனர்.   இந்தத் திட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRD) திட்ட ஒப்புதல் வாரியத்தின் (PAB) சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போது வழங்கப்படும் ஊதியத்தால் இவர்களின் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய இயலவில்லை. இவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் மருத்துவ செலவ...

நீதிபதி திரு.டி.முருகேசன் ஊதிய திருத்த குழுவில் ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் ஊதிய பிரச்சினை

Image
இன்று 11.03.2020 சென்னை கோட்டூர்புரம் தகவல் தொகுப்பு மையத்தில் மாண்புமிகு நீதிபதி திரு.டி.முருகேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஊதிய திருத்த குழுவில் ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் ஊதிய பிரச்சினை குறித்து நமது நிதி சார்ந்த 51பக்க விரங்களையும் பேசி மனு அளித்து உள்ளோம் அரசு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார் இதில் கடலூர் மற்றும் திருநெல்வேலி நண்பர்கள் கலந்து கொண்டார்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் ஒருங்கிணைத்த சங்கத்தமிழ் பெண்கள் விழா

Image
சங்கத்தின் சங்கத்தமிழ் பெண்கள் விழா --------------------------------------------------------------------- தமிழ்நாடு தமிழ்ச் சங்கமும் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் ஒருங்கிணைத்த சங்கத்தமிழ் பெண்கள் விழா வடலூரில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக திரு.ப.அழகப்பன் அய்யா அவர்களும் திரு அருள் சங்கு தமிழ்நாடு ஆசிாியா் ஐயா துரைமணிராஜன். தமிழ் சங்க மாவட்ட தலைவர் இரா.ராகுவசந்தன் மற்றும் துனை தலைவர்.முனைவர். ச.பிரவீன் அவர்களும் பேராசிாியா் ஜெகஜீவன்ராம்.சமுக சேவகா் திருமதி மோகனம்பாள் அவர்களுக்கும் மகளிர் உரிமைகள் குறித்து சிறப்பாக பேசினார்கள் இறுதியாக மகளிர் அனைவருக்கும் எழுதுகோல் நினைவு பரிசு வழங்கப்பட்டது இதில் ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், வினோத்குமார் மற்றும் ஏனைய தொகுப்பூதிய மகளிர் அணியினர் கலந்து  கொண்டனர்

வடலூரில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கல்வி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம்

Image
08.03.2020 வடலூரில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் (கடலூர்,நாகப்பட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை) தொகுப்பூதிய பணியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு அழைப்பாளராக புள்ளியல் துறை இணை இயக்குனர், தமிழ்நாடு தமிழ் சங்க மாநில பொருலாளரும் எனது சங்க அலோசகர்  திரு.ப.அழகப்பன் அவர்களும், தமிழ்நாடு ஆசிரியர் சங்க துணைச் செயலாளர் திரு.க.அருள்சங்கு அவர்களும் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் திரு. யு.ஜெகஜீவன்ராம் அவர்கள் செயலாளர் திரு.கதிர் காமம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் கூட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் காலமுறை ஊதியம் என இலக்காக பயணிப்பது தீர்மானம் செய்து நிறைவேற்றப்பட்டது.இதில் கடலூர் மாவட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் கடலூர் மாவட்ட ஒருங்கினைப்பாளர் திரு.ரூபன் குமார் வள்ளார் நினைவு பரிசு வழங்கினர் https://fast7news.in/?p=2053&fbclid=IwAR08Opbxw2Kdkq2-oKra1qH0Fjo2OWr-1_gTHeXjm88NYJpm7M5ZmXQ_3OU

ஒருன்ங்கினைந்த கல்வி திட்டத்தில் முடங்கிய கோடிகள் கல்வித்துறை குறட்டை - நக்கீரன் வார இதழ்

Image
நன்றி நக்கீரன் வார இதழ் ஒருன்ங்கினைந்த கல்வி திட்டத்தில் முடங்கிய கோடிகள் கல்வித்துறை குறட்டை - நக்கீரன் வார இதழ் நக்கீரன் (07-03-3020)பத்திரிக்கையில் நமது ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்களின் செய்தி வர நமக்கு உதவி செய்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தலைவர் திரு பி.கே.இளமாறன் அவர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் மற்றும் நமது சங்க ஆலோசகர் திரு பா அழகப்பன் ஐயா அவர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். மேலும் இதற்கு மார் ஒத்துழைத்த கடலூர் மற்றும் அனைத்து மாவட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நாளை மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் வடலூரில் நடைபெறுகிறது என்பதையும் உள்ள அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊதிய ஏற்றத்தாழ்வு பிரச்சினை தொல்லையால் பள்ளி கல்வி ஒருங்கிணைந்த தொகுப்பூதிய பணியாளர்கள் பாதிப்பு உள்ளாகின்றனர்

Image
(தினத்தந்தி ஆங்கில செய்தி) ஊதிய ஏற்றத்தாழ்வு பிரச்சினை தொல்லையால் பள்ளி கல்வி ஒருங்கிணைந்த தொகுப்பூதிய பணியாளர்கள் பாதிப்பு உள்ளாகின்றனர் குறிப்பாக மத்திய அரசு மனித வள மேம்பாட்டு துறை வழங்கும் மாத ஊதியை வழங்காமல் தமிழ்நாடு ஒருகிணைந்த கல்வி மாநில திட்ட இயக்கம் மறுத்து வருகிறது கடந்த மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் தமிழகத்தில் 1512 தொகுப்பூதிய பணியாளர்கள் அடிமாட்டு ஊதியம் பணிபுரிந்து எனவே சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில்  # புதிய   # நிர்ணயம் # செய்வும் அல்லுது  # காலமுறை  #நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் இது குறித்து ஆங்கில செய்தி மற்றும் கட்டுரை வர செய்த தமிழநாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் மனித நேயர். திரு.பி.கே.இளமாறன் ஐயா அவர்களுக்கும் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கடலூர் மற்றும் அனைத்து ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ...