ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய கணக்காளர்களின் பணி நிரவல் ஆணையை ரத்து செய்ய கோரிக்கை

 ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய கணக்காளர்களின் பணி நிரவல் ஆணையை ரத்து செய்ய கோரிக்கை


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின்  கீழ் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் செயல்பட்டு வருகிறது. திட்டத்தில் 700 மேற்பட்ட கணக்காளர்கள் மிக குறைவான தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். 02.09.2024 அன்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அவர்கள் செயல்முறைகளின் கடிதம் ந. எண் 1637/அ 3/ஒபக/2024 நாள் 30.08.2024 இருந்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கணக்காளர்களுக்கு பணி நிரவல் ஆணை வெளியிடப்பட்டது


பணி நிரவல் ஆணையில் தொகுப்பூதியத்தில் அனைத்து கணக்காளர்கள் பாதிக்கப்படுகிறோம், கணக்களர்கள் ஊதிய வேறுபாடு உடன் பணி புரிந்து வருகிறோம் , குறிப்பாக நிறைய மாவட்டங்களில் கணக்காளர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று இரண்டு மடங்கு பயண தூரம் சென்று பணிபுரியும் சூழல் உருவாகி உள்ளது என்பதை தெரிவித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நல சங்கம் சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு எண் 10125731 நாள் 04.09.2024 அன்று பணி நிரவல் ஆணை ரத்து செய்துவிட்டு விருப்ப பணிமாறுதல் கலந்தாய்வு நடத்திட கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநிலத் திட்ட இயக்குனரகம் முதலமைச்சர் தனிப்பிரிவு ஒ.மு எண் 1356/அ 5/ஒபக /2024 நாள் 12.09.2024 பதில் கடிதம் வழியாக விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதில் கடிதம் அளிக்கப்பட்டது, மேலும் பணி நிரவல் தொடர்பாக பல்வேறு மாவட்ட  அளவில் பணி நிரவல் ஆணை நடைமுறைப்படுத்த நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது, பணி நிரவல் ஆணையில் சரியான வழிகாட்டுதல்கள் இல்லை, ஆனாலும் நேற்று 19.09.2024 திண்டுக்கல் மாவட்டத்தில் பணி நிரவல் ஆனையை நடைமுறைப்படுத்துள்ளது என்பதை தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம்.


மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு பணி நிரவல் ஆனையை ரத்து செய்ய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது


பணி நிரவல் ஆனையால் அனைத்து கணக்காளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளோம், சமூக நிதியை காக்கும் திராவிட மாடல் முதல்வர்  கருணை உள்ளம் கொண்டு மாண்புமிகு முதல்வர், மாண்புமிகு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், பள்ளி கல்விதுறை செயலாளர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அவர்கள் பணி நிரவல் ஆனையை ரத்து செய்ய  பணிந்து கேட்டுக்  கொள்கிறோம்


தங்கள் உண்மையுள்ள


 ஒருங்கிணைந்த கல்வி தொகுபூதிய பணியாளர்கள் நல சங்கம் 34/2020





Comments

Popular posts from this blog

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டு (2020-21) பட்ஜெட்டில் மாத ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு கோரிக்கை

வடலூரில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கல்வி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம்

ஒருன்ங்கினைந்த கல்வி திட்டத்தில் முடங்கிய கோடிகள் கல்வித்துறை குறட்டை - நக்கீரன் வார இதழ்